×

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின் பிங் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகள் என்ன?

சென்னை: பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங் ஆகியோர் நேற்று இருநாட்டு உறவுகள் குறித்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதே ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியிருந்தார். சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கியிருந்தார். இருவருக்கும் தென்னிந்திய மற்றும் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது.  நேற்று காலை உணவாக அவர் தங்கியிருந்த தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் வழங்கப்பட்ட உணவுகளை பிரதமர் விரும்பி சாப்பிட்டார். அவருக்கு, கேரட் ஜூஸ், ஆரஞ்ச் பழம், தர்பூசணி, மாதுளம்பழம் பரிமாறப்பட்டது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட புரூட் சாலட்டில் பப்பாளி, தர்பூசணி, அன்னாசிபழம், டிராகன் மற்றும் கிவி பழங்கள் இடம்பெற்றிருந்தது.

 அதனுடன், தென்னிந்திய உணவு வகைகளான பிளேன் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, ரவா இட்லி, தோசை வகைகளில் செட் தோசை, மசால் தோசை, ரவா தோசை, ஊத்தப்பம் வகைகளில்  பிளேன் ஊத்தப்பம், தக்காளி மற்றும் வெங்காய ஊத்தப்பம், மெதுவடை, உப்புமா, பொங்கல், கேசரி, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, இஞ்சி சட்னி, கருவேப்பிலை சட்னி, பொடி, நெய் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தது. அவற்றை பிரதமர் மோடி விரும்பி சாப்பிட்டார்.
 அதேபோன்று சீன அதிபர் ஜின் பிங்கிற்கு அவர் தங்கியிருந்த ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் காலை உணவு வழங்கப்பட்டது. அவர் விரும்பி கேட்ட தமிழகத்தின் பாரம்பரிய சுவைமிக்க இளநீர் மற்றும் மாதுளை ஜூஸ் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, காஷ்மீரில் இருந்து கொண்டு வரப்பட்ட பழங்களை வைத்து செய்யப்பட்ட ஸ்டப்ட் மலை குச்சி, மகாராஷ்டிரா உணவான உருளை கிழங்கு மற்றும் அரிசியை வைத்து செய்யப்பட்ட மசாலா போகா ஆலோ டிக்கி, தமிழக உணவான பொடி உப்பு உருண்டை போன்ற சைவ உணவுகள் வழங்கப்பட்டது.

 மேலும் அவரது காலை உணவில் அசைவ உணவுகளும் இடம்பெற்றது. தேங்காய் எண்ணெயில் வேகவைத்த அரேபிய கடாய் இறால், செம்மீன் தேங்கா பால், லக்னோ உணவு வகையான  சிக்கனில் தயாரிக்கப்பட்ட தோடியா முருகு டிக்கா, பழைய டெல்லி தெருவில் பிரபலமான ஆட்டுக்கறி உணவான புனா கோஸ்ட் தவா கீபாப் போன்ற உணவுகளும் பரிமாறப்பட்டது. அதை தொடர்ந்து  வட இந்தியாவில் புகழ் பெற்ற காஜர் அர் நிம்பு சோர்பா சூப் வழங்கப்பட்டது.

Tags : Modi ,Jin Ping ,Chinese , Prime Minister Modi, Chinese President Jin Ping, Foods
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி